இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: குடும்பத்தில் முக்கிய காரியங்கள், பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த, பகை பேசி முடிக்க, யோகா, வேதம் பயில, வாழை, கரும்பு நட, அறுவை சிகிச்சை செய்ய நன்று. வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் வழிபட ஏற்ற நாள். பெண் தெய்வங்களுக்கு உகந்த நாள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது குடும்பத்தில் நிம்மதி, சுபிட்சத்தைக் கொடுக்கும்.

மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்களும் அறிமுகமாவார்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டு.

மிதுனம்: மனதைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் அடுத்தடுத்து சுபச்செலவுகள் ஏற்படக் கூடும். விருந்தினர், உறவினர் வருகையால் வீடு கலகலப்பாகும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்..

கன்னி: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. இழுபறியாக இருந்த திருமண பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்..

துலாம்: முகப் பொலிவு கூடும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

தனுசு: வீண் அலைச்சல் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிற்பகல் முதல் சாதகமான சூழல் காணப்படும். பண உதவி கிட்டும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மகரம்: வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகள் எரிச்சலைத் தரும். ஆன்மீகத்தில் மனதைச் செலுத்துவது நல்லது.

கும்பம்: வீண் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. உடல்நலம் சீராகும்.

மீனம்: திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

39 mins ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்