இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசித்து முடிவு எடுப்பீர். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். திடீர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

மிதுனம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். முக்கிய பிரமுகர்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். திருமணம், சீமந்தம் என்று விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்.

சிம்மம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

கன்னி: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினரின் தொல்லை குறையும்.

துலாம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைதிறன் அதிகரிக்கும். குழப்பம் தீர்ந்து குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும்.

விருச்சிகம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

தனுசு: மனச்சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். பணவரவு உண்டு.

மகரம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் வேலைகளை செய்து முடிப்பீர். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.

மீனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை தேடி வருவர். வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்