இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். கணவன் – மனைவிக்குள் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

ரிஷபம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் திருப்தி தரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வீட்டுக்கு புதிய பொருட்கள் வந்து சேரும்.

மிதுனம்: போட்டிகள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. தேவையற்ற மனஇறுக்கம் நீங்கும். விஐபிக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான திருப்பம் வரும்.

கடகம்: நினைத்த காரியம் நிறைவேறும். மனக் குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பொருட்கள் சேரும்.

சிம்மம்: வீண் கோபத்தை தவிர்க்கவும். திடீர் வெளியூர் பயணத்தால் அலைச்சல், அசதி அதிகரிக்கும். குடும்பத்தினரின் அறிவுரையை கேட்டு செயல்படுங்கள். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுங்கள்.

கன்னி: இடையூறுகள், சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு.

துலாம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

விருச்சிகம்: விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

தனுசு: நீண்டகாலமாக தடைபட்ட வேலைகளை, உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

மகரம்: பழைய நினைவுகள் மனதுக்கு நிம்மதி தரும். எடுத்த வேலைகள் அலைச்சலுக்கு பிறகு முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

கும்பம்: பிரபலங்களை சந்திப்பீர்கள். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அன்பாக பழகுங்கள். பயணங்கள் அலைச்சல் தரும். உடல்சோர்வு ஏற்படும்.

மீனம்: உறவினர் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் பேச்சாற்றல் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்