மேஷம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாசனை திரவியம், கலை பொருட்கள் சேரும்.
ரிஷபம்: வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்கள், சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து இனி வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலை சுமை குறையும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்.
சிம்மம்: தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாகச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவு உண்டு.
கன்னி: குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் விருந்தினர் வருகை உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.
துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவர்கள். கலை பொருட்கள் சேரும்.
தனுசு: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உதவி செய்யும்போது கவனமாக இருக்கவும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: பணவரவு திருப்தி தரும். இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அழகு, இளமை கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
கும்பம்:பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவர். நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்குவீர். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர். தந்தைவழியில் ஆதாயம் உண்டு.
மீனம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago