மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன் இருப்பவர்களின் குணங்களை புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர்.
ரிஷபம்: இரண்டு நாளாக வந்த அலைச்சல்கள் குறையும். குடும்பத்தினரை எப்போதும் அனுசரித்துச் செல்வது நல்லது. நிதானமான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் பற்றி சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
கடகம்: அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். சில பணிகள் தடைகளுக்கு பின் முடியும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி குறையும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
» தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தலைவர்கள் புகழாரம்: தமிழக பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்
சிம்மம்: மனைவிவழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்.
கன்னி: புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் சேரும்.
துலாம்: தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உறவினர், நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்: உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் கோபமின்றி செயல்படவும். வழக்கு தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும்.
தனுசு: முக்கிய பிரமுகர்களுடன் அறிமுகம் உண்டாகும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும்.
மகரம்: நீண்ட நாள் தடைபட்ட பயணத்தை மேற்கொள்வீர். வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பழைய வழக்கு சாதகமாக அமையும்.
கும்பம்: வியாபாரத்தில் அலைச்சல் உண்டு. பிள்ளைகளின் உயர் கல்வியில் கவனம் வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். உத்தி யோகத்தில் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்.
மீனம்: உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago