மேஷம்: குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். வீண் செலவுகளும், அலைச்சலும் இருக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
ரிஷபம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போகும். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. திடீர் பயணங்கள் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மிதுனம்: சகோதர வகையில் நன்மை உண்டாகும். நட்பு வட்டம் விரியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறும். பழைய வழக்குகள் சாதகமாகும்.
கடகம்: பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வாகனத்தை மாற்றுவீர்கள்.
சிம்மம்: குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.மனைவிவழி உறவினர்களுடன் இணக்கமாகச் செல்லவும். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.
கன்னி: யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: கடந்த கால சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.தாய்வழி உறவினர்களுடன் இருந்த பனிப்போர் விலகும்.மனைவி, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
தனுசு: புதிய எண்ணங்கள் தோன்றும். நண்பர்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர். பழைய வீட்டை விற்க முயற்சி செய்வீர்கள்.
மகரம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்கள், முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.
கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும்.விருந்தினர் வருகை உண்டு.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மீனம்: எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் விலகும்.குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நல்லது நடக்கும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். பணப் பற்றாக்குறை நீங்கும். பழைய வீட்டை விற்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago