இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவால் பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: உங்களது நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.

கடகம்: சவாலான காரியங்களையும் எளிதில் செய்து முடிப் பீர். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு செயல்படுவர்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன் கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும்.

கன்னி: தம்பதிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். கடன் பிரச்சினையை நினைத்து கலங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.

துலாம்: அடிமனதில் இருந்த பயம், குழப்பம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். பிறரிடம் நீங்கள் வேடிக்கையாக பேசுவது, தவறாக புரிந்து கொள்ளப்படும்.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள்.

தனுசு: திடீர் யோகம், பணவரவு உண்டாகும். நண்பர்கள், முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள்.

மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

கும்பம்: கோபதாபம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள், நண்பர்கள் இப்போது உங்களைத் தேடி வருவர்.

மீனம்: முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். பூர்வீக சொத்துகைக்கு வரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. பணவரவு திருப்தி தரும். குலதெய்வ கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடை வழங்குவீர்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE