மேஷம்: கணவன் - மனைவிக்குள் குழப்பம், கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வாகனம் பழுதாகும். திடீர் விருந்தினர் வருகை உண்டு.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப் பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கலை பொருட்கள் சேரும்.
கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருந்ததை வாங்கி தருவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள்.
» தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு
» கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 640 சிறப்பு பேருந்து இயக்கம்
சிம்மம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.
கன்னி: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பயணங்களால் பயனடைவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய வீட்டு மனை, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும்.
துலாம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசி பழகவும்.
விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்களின் வருகை உண்டு.
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் உண்டு.
மகரம்: விவாதங்களில் வெaற்றி பெறுவீர்கள். சொந்த - பந்தம் மதிக்குமளவுக்கு நடந்து கொள்வீர். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தாய்வழி சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையில் வெற்றி உண்டு.
கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பதவி உங்களைத் தேடி வரும். வாகனத்தை மாற்றுவீர்கள்.
மீனம்: முன் கோபத்தை குறைப்பது அவசியம். பண விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். பழைய நினைவுகளை நினைத்து கொஞ்சம் நிம்மதி இழப்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago