மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர் . உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். அயல்நாட்டு பயணம் ஏற்படும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மிதுனம்: பிள்ளைகளின் சாதனைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சரி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூறி கொண்டிருக்க வேண்டாம்.
கடகம்: குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி திரும்பும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர். நினைத்த காரியம் நல்ல விதத்தில் முடியும்.
சிம்மம்: முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். நினைத்த காரியங்கள் இழுபறியில் போய் முடியும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
கன்னி: திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பழைய வழக்கு சாதகமாகும்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. உறவினர்கள் அனு கூலமாக நடந்து கொள்வர். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வாகனத்தை மாற்றுவீர்கள்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீர்.
தனுசு: முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். தாய்வழி உறவுகளுடன் கருத்து மோதல் வரக்கூடும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகன வசதி பெருகும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
கும்பம்: குடும்பத்தினருடன் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்பு தொல்லை குறையும்.
மீனம்: குடும்பத்தில் கவனமாக செயல்படுங்கள். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago