இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டாகும். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

ரிஷபம்: தேவையற்ற மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தை வழி உறவினர்களால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டாகும். பேச்சில் பொறுமை தேவை.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு செயற்கரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனக் குழப்பம் நீங்கும். புதிய நபர்களால் நன்மை கிடைக்கும். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய், சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராடவேண்டி வரும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு.

கன்னி: அரசு, வங்கி காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். விலகி இருந்த சொந்த பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: வெளியூர் பயணத்தால் ஆதாயம், அனுகூலம் உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். எதிலும் நிதானம் தேவை.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்கள் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணத்துக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE