இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விருந்தினர் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அடகிலிருந்த நகைளை மீட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிது வாங்க திட்டமிடுவீர். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

ரிஷபம்: கையிருப்பு கரையும். மனநிம்மதியற்ற நிலை உருவாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் குறைபட்டு கொள்வர். உறவினர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். வீடு, வாகனம் சேரும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பழைய சொத்துப் பிரச்சினை தீரும்.

கடகம்: மனதில் இருந்துவந்த தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புது வீடு, வாகனம் வாங்க யோசனை பிறக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். தோற்றப் பொலிவு கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

துலாம்: வம்பு, வழக்கு, பிரச்சினைகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் குழப்பம் நீங்கி நெருக்கம் உண்டாகும்.

விருச்சிகம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

தனுசு: உடன் பிறந்தவர்களுக்குள் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

மகரம்: அடுத்தடுத்து பயணங்கள் இருக்கும். கட்டுப்படுத்த முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஈகோ பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்