இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பாராத வகையில் பணவரவு உயரும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். எதையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பணவரவு உண்டு.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்க திட்டமிடுவீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பணவரவு உண்டு.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு புது வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். ஆடை., ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். திடீர் பயணம் உண்டு.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவரின் அறிமுகம் கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE