இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப் போன திருமண விஷயம் சிறப்பாக கூடி வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

கடகம்: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

சிம்மம்: மனச் சோர்வு, உடல் அசதி வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்பு தொடர்பாக தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்துடன் புனித தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நல்ல இடவசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

துலாம்: பிள்ளைகளின்சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். சில விஷயங்களை நீங்களே முன்னின்று செய்வது நல்லது.

தனுசு: எதிர்பார்த்தபணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய வாகனத்தில்செல்லும்போது கவனம் தேவை.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட் செலவு வரக்கூடும். வாகனம் பழுதாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுங்கள். தாயாரின் உடல் நலனை கவனிக்கவும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்க வழி கிடைக்கும்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். குடும்ப பிரச்சினைகளில் அந்நியர்கள் தலையிடு வதற்கு இடம் கொடுக்காதீர்கள். பணவரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்