இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். பணவரவு உண்டு.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்

கடகம்: உடல் உஷ்ணத்தால் சில பிரச்சினைகள் வரக் கூடும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொந்த ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: மூத்த சகோதரர் வகையில் சில காரியங்கள் நிறைவேறும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: சமயோசித புத்தியுடன் பல காரியங்களையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். கடனை தீர்க்க வழி பிறக்கும். தடைபட்டு போன திருமண பேச்சுவார்த்தை மீண்டும் வேகமெடுக்கும்

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE