இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த பந்தங்கள் கேட்ட உதவியை செய்வீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் உண்டு. சுபச் செலவுகள் வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பணப் புழக்கம் உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். வேலைச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: தொழில், வேலையில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் நல்லபடியாக நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். உங்கள் ஆலோசனைகள், முடிவுகளை அனைவரும் ஏற்று நடப்பார்கள்.

மகரம்: சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். நட்பு வழியில் நல்ல சேதி கேட்பீர்கள். உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

மீனம்: சகோதர வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்