இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வாகனம் எதிர்பாராது செலவு வைக்கும்.

ரிஷபம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: மனச் சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு தொடர்பான அலைச்சல் வரும்.

சிம்மம்: பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சிகரமான சம்பவங்களை நினைவுகூர்வீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் பெருகும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தருவதாக அமையும்.

கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும்.

விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்தி கரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

தனுசு: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. அரசாங்க காரியங்கள் எளிதில் நிறைவடையும். கலை பொருட்கள் சேரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாயார்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். தியானத்தி்ல் ஈடுபடுவது நல்லது.

கும்பம்: சகோதரர் வகையில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதரர் வகையிaல் மகிழ்ச்சியுண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வழக்குகள் சாதகமாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்