மேஷம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். முகப் பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். கலை பொருட்கள் சேரும்.
கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை.
» டீப்ஃபேக் வீடியோக்களை தடுக்க புதிய சட்டம்: மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
» பயிற்சி விமானங்களை லஞ்சமாக பெற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரி பணியிடை நீக்கம்
சிம்மம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நண்பர்கள், விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
கன்னி: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
துலாம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். உடன்பிறந்தவர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த - பந்தங்கள் மதிக்கும் அளவுக்கு நடந்து கொள்வீர். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். மகளின் திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.
மீனம்: முன்கோபத்தை குறையுங்கள். பண விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago