மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. அக்கம் பக்கத்தினரிடம் அளவாக பேசி பழகவும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் அமையும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைகாணப்படும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
கடகம்: சின்னச் சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். முன்கோபம் அதிகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவர். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர். குடும்பத்தினருடன் ஆலோசனை செய்த பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பது அவசியம். பழைய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கன்னி: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர். விருந்தினர் வருகை உண்டு.
துலாம்: சோர்வு, அலைச்சல் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழப்பம் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
விருச்சிகம்: நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்காமல், நீங்களே முன்னின்று செய்வது நல்லது.
தனுசு: மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டு பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.
மகரம்: புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம்.
கும்பம்: பண விஷயத்தில் கறாராக இருங்கள். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். புதிய பொறுப்புகள், பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.
மீனம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர். எதிலும் கவனமாக செயல்படவும். வழக்குகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago