மேஷம்: வாகனத்தை மாற்றுவது, சீர் செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவி கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.
மிதுனம்: பழைய பகை நீங்கும். உறவினருடன் ஈகோ பிரச்சினைகளும், விமர்சனங்களும் வந்து போகும். வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள்.
கடகம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதியில் நின்று போன பல காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
» உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க கதி சக்தி திட்டம்: இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
» தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவராக பிரவீன் சக்ரவர்த்தி நியமனம்
சிம்மம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். விஐபிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். பழைய வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும். அரசு காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
கன்னி: பிள்ளைகள் சாதனைகளால் புகழடைவர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்துடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற திட்டமிடுவீர்.
துலாம்: எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததை போல உணர்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாரிடமும் குடும்ப பிரச்சினைகளை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
விருச்சிகம்: அதிநவீன எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர். சகோதரர்களால் பயனடைவீர். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
தனுசு: எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். வருமானமும் குறையாது. குடும்பத்தில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர். வெளிநாட்டு பயண முன்னேற்பாடுகள் நிறைவடையும்.
மகரம்: மற்றவர்கள் உங்களைப் பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் வந்து நீங்கும். பழைய வழக்குகள் இழுபறியாகவே இருக்கும்.
கும்பம்: வறட்டு கவுரவத்துக்காக செலவு செய்ய வேண்டாம். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பழைய சொந்த பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
மீனம்: பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் நெருங்கிப் பழகுவதை தவிர்ப்பது நல்லது.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago