இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குழப்பம் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க உறுதி எடுப்பீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நண்பர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். பாதியில் நின்ற வேலைகளை முடித்து காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

கன்னி: யாரையும் நம்பாமல் தன்னம்பிக்கையுடன் செயல் பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை மனதில் இருக்கும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த விவாதம் இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனஸ்தாபம் வரும். உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராகும். பழைய வாகனம் செலவு வைக்கும்

மகரம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு. சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: அநாவசியச் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நண்பர்களுடன் சேர்ந்து, புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உடல்நலனில் கவனம் தேவை.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்