இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு உண்டு.

ரிஷபம்: பணி நிமித்தமாக, சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் சேர்ந்தே வரும். சகோதர வகையில் மனநிம்மதி கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

கடகம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவீர். அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். முன்கோபம் வரும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மன அமைதிக்கு தியானம் செய்யவும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர் மீண்டும் வந்து பேசுவர். திடீர் பணவரவு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். கலை பொருட்கள் சேரும்.

துலாம்: வாழ்க்கையில் வெற்றி பெற பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தற்போது இருக்கும் வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து போகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. பழைய வாகனம் செலவு வைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டு.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும். இதுவரை தாமதமான காரியங்கள் இனி நிறைவுபெறும்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களை கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE