இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.

ரிஷபம்: புதிய தெம்பு, உற்சாகம் பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். பண வரவு தாராளமாக இருக்கும்.

மிதுனம்: உங்கள் பேச்சாற்றல், நிர்வாகத் திறமை கூடும். அடகு வைத்த ஆபரணங்களை மீட்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: அநாவசியமாக யாருக்காகவும், எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்: திடீர் பயணங்களால் அலைச்சல், அசதியுடன் ஆதாயமும் உண்டு. சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, செலவுகள் வந்துபோகும்.

கன்னி: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திடமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும்.

துலாம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் தோன்றும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: முன்கோபத்துக்கு இடம்தராதீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து நீங்கும். தொட்ட காரியம் துலங்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மகரம்: சுறுசுறுப்பாக செயல்பட்டு, தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

கும்பம்: போட்டி, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்ததுபோல, மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்