மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள்.
ரிஷபம்: மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். நட்பு வட்டம் விரிவடையும். பேச்சில் பொறுமை தேவை.
மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். வீண் பிரச்சினைகள் வந்து விலகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்: குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் வந்துபோகும். திடீர் செலவுகள், பயணங்கள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
» காசா போரை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தல்
» நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். திருமண முயற்சி பலிதமாகும். விட்டுக்கொடுத்து சில வேலைகளை முடிப்பீர்கள்.
கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். எதிர்காலம் குறித்து நெருங்கியவர்களுடன் ஆலோசிப்பீர்கள். பயணத்தால் அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு.
துலாம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தடைபட்ட வேலை முடியும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்: பொறுமையாக இருந்து சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். வீடு, கடையை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.
மகரம்: வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்: பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுங்கள். பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago