மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: சகோதர வகையில் சொத்து பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.
மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.
கடகம்: சவாலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.
சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
துலாம்: அடிமனதில் இருந்த கவலை, பயம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் சாதனையால் பெருமை அடைவீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
தனுசு: திடீர் யோகம் உண்டாகும். பால்ய நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.
மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்.
கும்பம்:கோபதாபம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தந்தைவழி உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago