இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதி கரிக்கும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.

மிதுனம்: ஒரே நாளில் முக்கியமான பல வேலைகளை பார்க்கவேண்டி வரும். குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும். விட்டுக்கொடுத்து போவது நல்லது.

கடகம்: தாய் உடல்நிலை சீராகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பழைய சிக்கல்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும்.

சிம்மம்: குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறை வேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். காணாமல்போன முக்கிய ஆவணம் திரும்ப கிடைக்கும்.

கன்னி: மனதில் புதிய சிந்தனை தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எக்காரியத் திலும் பொறுமை தேவை.

துலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதி காரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

விருச்சிகம்: பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம், அனுகூலம் உண்டு.

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். யாரையும் பகைத்துக் கொள் ளாதீர்கள். பண வரவு உண்டு.

கும்பம்: வெளி வட்டாரத்தில் அலைச்சல், அசதி, செலவு அதிகரிக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

மீனம்: குடும்பத்தில் மனஸ்தாபம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்