இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வேற்றுமதத்தவர், வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவர். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வர்.

கடகம்: அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர். நீண்ட நாளாக இழுத்தடித்த வழக்கு முடிவுக்கு வரும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. சகோதரர்களின் உதவியால் சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப் பொலிவு கூடும். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு தீரும்.

தனுசு: பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதிய பொறுப்பு தேடி வரும்.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்