இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நீங்கள் வேடிக்கையாக பேசுவது வினையாக முடியும்.

ரிஷபம்: நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் உதவுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்.

மிதுனம்: பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரிப்பர். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாகும்.

கடகம்: விலகியிருந்த பழைய சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பீர்கள். குலதெய்வம் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

கன்னி: திடீர் திருப்பங்கள் உண்டாகும். விஐபிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும்.

துலாம்: பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

விருச்சிகம்: முன்கோபம் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பிள்ளைகளை விட்டுப் பிடிக்கவும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பழைய கல்லூரி நண்பரை சந்திப்பீர்.

மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். பணவரவு உண்டு.

கும்பம்: அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். வசதிகள் பெருகும்.

மீனம்: உங்களின் திறமைகள் வெளிப்படும்.குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் கவனம் தேவை.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்