இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விஐபிக்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். சிக்கல்களை தீர்க்க நல்லவர்களின் ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும். திடீர் பண வரவு, பொருள் வரவு உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. எக்காரியத்திலும் நிதானம் தேவை.

கடகம்: மனதில் நம்பிக்கை, தைரியம், உற்சாகம் பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கன்னி: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்: யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. சொல்ல வருவதை நாசூக்காக, மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்திருக்கும் நல்ல சேதி வந்து சேரும்.

தனுசு: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை புதுப்பித்து கட்டுவீர்கள்.

மகரம்: பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.

கும்பம்: பணிச்சுமை குறையும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். ஆரோக்கியம் கூடும். பெற்றோருடன் இருந்த மனத் தாங்கல் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும்.

மீனம்: வீடு, வாகன வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவை.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்