மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக வேலை தேடி கொண்டிருந்தவர்களுக்கு புது வேலை அமையும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: தோல்விகளை மறந்து, புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் உங்கள் பங்கை கேட்டு வாங்குவீர். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.
கடகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். மனதில் இருந்த தேவையில்லாத பயம் விலகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் இருக்கும்.
சிம்மம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசி தமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவும் உண்டு. யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதை தவிர்க்கவும். கலை பொருட்கள் சேரும்.
கன்னி: வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்துவிடும் என நினைத்த காரியங்கள் கூட அலைய வைத்து முடியும். வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், அலர்ஜி வரக் கூடும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்: திடீர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு.
விருச்சிகம்: குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். நீண்ட நாள் வழக்கில் முன்னேற்றம் உண்டு.
மகரம்: சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் வாங்குவீர். பழைய வாகனத்தை மாற்ற முயற்சி மேற்கொள்வீர்கள்.
கும்பம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். மனதில் வீண் பயம், கவலைகள் இருப்பதால் வழக்கில் நிதானம் அவசியம். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி தங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago