மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகளைச் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்சினைகளில் ஒன்றில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.
மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
சிம்மம்: அழகு, இளமை கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.
கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் எரிச்சலை ஏற்படுத்தும். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. அநாவசிய செலவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விஐபியுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மகரம்: பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.
கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
மீனம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
47 mins ago
ஜோதிடம்
56 mins ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago