இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: ஆடம்பரச் செலவுகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு, குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். சீமந்தம், திருமணம், கிரஹப்பிரவேசம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். சொந்த ஊரில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். கனிவான பேச்சால் உங்கள் செயல்பாடுகளில் வெற்றி காண்பீர். கலை பொருட்கள் சேரும்.

சிம்மம்: வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தை மாற்றியமைப்பது குறித்து யோசிப்பீர். நீண்ட காலமாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

கன்னி: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பது நல்லது.

துலாம்: அனுபவப்பூர்வமாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

விருச்சிகம்: மனக் குழப்பத்தால் அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து விடவும்.

தனுசு: வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். யாருக்கும் ஃபைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். புதிய வாகனம் வாங்குவீர்.

மகரம்: தேவைக்கேற்ப பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த கடனையும் தந்து முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்தி முடிப்பீர்கள். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் தாமதமின்றி உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவீர்கள்.

மீனம்: தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்குமதிப்பளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய வீடு விற்பனையாகி பணம் கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்