மேஷம்: காலை 9 மணி முதல் சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். புது தெம்பு பிறக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர் . அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
» ''இந்தியா நிலவை அடைந்துவிட்டது; பாகிஸ்தான் நிதிக்கு கையேந்துகிறது" - நவாஸ் ஷெரீப் விமர்சனம்
» “டி20 லீக்கில் கிடைக்கும் பணத்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விடை தருகிறேன்” - டிகாக்
சிம்மம்: உங்களிடம் இருக்கும் சோர்வு நீங்கி, உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். பழைய வாகனம் செலவு வைக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும்.
துலாம்: காலை 9 மணி முதல் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில், சேர்த்து விடவும். பணவரவு உண்டு.
தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பழைய வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.
மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய பதவி, பொறுப்பு தேடி வரும்.
மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள், சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago