இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் உண்டாகும். வாகனத்தை சரிசெய்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று, சில பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவீர்கள்.

ரிஷபம்: புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தடைகள், இடையூறுகளை கடந்து சாதனை படைப்பீர்கள். விஐபிக்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.

மிதுனம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கிய பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தை கூடிவரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

கடகம்: புது பொறுப்புகள், வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். பிள்ளைகள் நீண்டநாளாக கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

சிம்மம்: போட்டி, சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் கலைத் திறனை கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள்.

கன்னி: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிந்து சரிசெய்வீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள்.

துலாம்: பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தை போக்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அனைவரையும் கவர்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். கலைப் பொருட்கள் சேரும்.

தனுசு: காணாமல்போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

மகரம்: பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய நபர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் பேச்சாற்றல், ஆளுமை திறன், நிர்வாக திறன் அதிகரிக்கும்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.

கும்பம்: கடந்தகால கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்துவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப் பற்றாக்குறை ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்