இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்ப்புகள் விலகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பு உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்.
வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பி கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பர்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். பால்ய நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி: குழப்பம் நீங்கி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய வழக்குகள் விசாரணைக்கு வரும்.

துலாம்: குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிப்பதை தவிர்க்கவும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வாகனத்தை சரி செய்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும்.

கும்பம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

மீனம்: அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்