மேஷம்: பணவரவு உண்டு. எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறை
யும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.
மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லத்
தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு, வாகன யோகம் ஏற்படும்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். புதிய தொழிலில் சாதனை புரிவீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.
சிம்மம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியான வழக்கில் வெற்றி கிட்டும்.
கன்னி: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.
துலாம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணம் வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்
கள். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி அகலும்.
தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.
பழைய கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். வேடிக்கையாக பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படும்.
மகரம்: தவிர்க்க முடியாத வெளியூர் பயணங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வாகனம், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினர் உதவி புரிவார்கள். புதிய தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.
மீனம்: உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். தேவையற்ற பேச்சு, விவாதங்களை தவிர்க்கவும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago