இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர்,வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன்கள் தீரும்.

ரிஷபம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: கடன்கள் தீர்ந்து சேமிப்புகள் அதிகமாகும். குடும்பத்தில் உள்ள வீண் விவாதங்கள் விலகும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவதால் நன்மை உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாக முடியும்.

சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர். புதிய வீடு கட்ட, எளிதில் வங்கி கடனுதவி கிடைக்கும்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். கலை பொருட்கள் சேரும்.

துலாம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜி தமாக பேசும் சாமர்த்தியம் வரும். சகோதர - சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள், பதவிகள் உங்களைத் தேடி வரும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்