இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: புது வாகனம், நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களது அதிரடி வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

ரிஷபம்: எதையும் சமாளிக்கும் நம்பிக்கை, தைரியம் பிறக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் சுமுக தீர்வு காண்பீர்கள்.

மிதுனம்: சந்தர்ப்ப சூழலை புரிந்துகொண்டு சமயோசிதமாக பேசி, காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க நேரிடும். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வந்துபோகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

சிம்மம்: எதிர்பாராத செலவுகள் இருக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கன்னி: மனதில் நம்பிக்கை, புது தெம்பு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அலைச்சல் குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீண் செலவுகளை குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். விஐபிக்களுடன் சகஜமாக பேசி, காரியத்தை முடிப்பீர்கள். நீண்ட நாள் கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குலதெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: பழைய கடன் பற்றிய கவலை, வீண் பயம் அவ்வப்போது வந்துபோகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பண வரவு உண்டு. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது.

மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களை கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனை தீர்க்க உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான திருப்பம் வரும். பேச்சில் பொறுமை தேவை.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE