மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கலை பொருட்கள் சேரும்.
மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வார்கள். யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் மோதல் வந்து நீங்கும்.
» பட்டா நிலத்தில் இருந்து சந்தன மரம் வெட்டி கடத்திய இருவருக்கு வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு
சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்கள் செல்ல திட்டமிடுவீர். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
கன்னி: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.
விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறு சிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கப் பாருங்கள்.
தனுசு: அத்தியாவசிய பயணங்களுக்கு திட்டமிடுவீர். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
மகரம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மனதில் இருந்த வீண் பயம் நீங்கும். பழைய சொத்து விற்பனையாகி பணம் கிடைக்கும்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து அருகில் இருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வதால், வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago