மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. மனைவியுடன் கருத்து மோதல் வரும்.
மிதுனம்: பேச்சாற்றல், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.
கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.
» கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை - மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் பதில்
சிம்மம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகளை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
துலாம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.
விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
தனுசு: வீடு, வாகன வகையில் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களை பற்றி பெருமையாக பேசுவார்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
மகரம்: பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்: கோபதாபங்கள் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் உங்களை நாடி வருவார்கள்.
மீனம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் திருவிழாவுக்கு நன்கொடை வழங்குவீர்கள். பண வரவு உண்டாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
38 mins ago
ஜோதிடம்
50 mins ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago