மேஷம்: உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.
மிதுனம்: தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். மகளின் திருமண பேச்சுவார்த்தை சாதகமாகும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.
கடகம்: சிறு சிறு நெருப்பு காயங்கள் ஏற்படக் கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
» தமிழகத்தில் 6 நாள் மழைக்கு வாய்ப்பு
» மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு
சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக கிராமத்தில் முதல் மரியாதை கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.
கன்னி: சவால்களில் வெற்றி பெறுவீர். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். முக்கியஸ்தர்கள் உதவியால் வீடு கட்டும் பணிகள் விரைந்து முடியும்.
துலாம்: உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வேற்று மதத்தவர், வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. தியானம் செய்யவும்.
விருச்சிகம்: ஓரளவு மனப்போராட்டங்கள் ஓயும். குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தனுசு: தன்னம்பிக்கை பிறக்கும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதிதாக தங்க நகைகள் வாங்குவீர். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூறுவதைத் தவிர்க்கவும்.
மகரம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிந்து களைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாளாக பேசாதிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர்.
கும்பம்: வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். புதிய பதவி கிட்டும்.
மீனம்: சின்ன சின்ன விஷயங்களையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago
ஜோதிடம்
6 days ago