இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வாகனப் பழுது நீங்கும். மூத்த சகோதரர் பாசமாகப் பேசுவார். நீங்களும் சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு வழி பிறக்கும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: உங்கள் புகழ், கவுரவம் உயரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொந்த - பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: வருமானம் உயரும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். பிள்ளைகள் உங்களின் அருமையை புரிந்து கொள்வார்கள். சொந்த - பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

சிம்மம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சொந்த - பந்தங்களில் நல்ல மனது உள்ளவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்வீர்கள்.

கன்னி: பணவரவு அதிகரிக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். வி.ஐ.பிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். புதிய நண்பர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: அநாவசியச் செலவுகளை தவிர்க்கவும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீட்டை சீரமைத்து, புதுப்பித்து கட்டுவீர்கள்.

தனுசு: ஷேர் லாபம் தரும். வி.ஐ.பிகள் ஆதரவாகப் பேசுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை வைத்து சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகன், மகள் ஆகியோரின் திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

மகரம்: மன மகிழ்ச்சி, நிம்மதி கிட்டும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். தொட்ட காரியம் துலங்கும். வங்கிக் கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். தந்தை வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம்.

மீனம்: வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேசவேண்டாம். கடன் பிரச்சினைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். யாரையும், யாருக்காகவும் பகைத்து கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்