இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவர். வீட்டு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பழைய கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.

மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாளாக பேசாத உறவினர்கள் வலிய வந்து பேசுவர்.

கடகம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். எதிலும் அவசரப்பட வேண்டாம். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

சிம்மம்: பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

கன்னி: விஐபிகளின் அறிமுகம் கிட்டும். வேற்று மொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும்.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. புதிய தொழில் தொடங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்.

விருச்சிகம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

தனுசு: யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: முக்கிய பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் இனி விரைந்து முடியும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன்கள் ஒவ்வொன்றாக தீரும்.

கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை தடைபட்ட காரியங்கள் இனி விரைவாக முடியும்.

மீனம்: பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்