மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
ரிஷபம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நாவடக்கம் தேவை. பூர்வீக வீடு தொடர்பாக பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்கும் சிபாரிசு கையெழுத்திட வேண்டாம். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
» தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
» கலை, அறிவியல் படிப்புக்கு புதிய பாடத் திட்டம்: அமைச்சர் பொன்முடி விளக்கம்
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நண்பர்களிடம் கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
கன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். சொந்த - பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பழைய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்ப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
துலாம்: புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். மனதில் இருந்த குழப்பம் தீரும். பழைய நண்பரை சந்திப்பீர்கள்.
தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எல்லோரும் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். நீண்ட நாளாக நடைபெற்ற வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும்.
மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களை கட்டும். வெளியூர் பயணம் நன்மை தரும்.
கும்பம்: நண்பர்கள் உதவுவர். பழைய கடன் தீர வழி கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புதிய பொறுப்புகள் கூடும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.
மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பழைய வாகனத்தை விற்பனை செய்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago