மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உடல் நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். நண்பர்கள் உதவுவர்.
மிதுனம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டிய வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது அவசியம். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
கடகம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர். உறவினர் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிக செலவு வைக்கும் வாகனத்தை விற்பீர்கள்.
கன்னி: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்: எதிர்பார்த்தவை தாமதமாகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
விருச்சிகம்: உங்களது திறமைகள் வெளிப்படும். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. பொருட்கள் சேரும்.
மகரம்: புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். உங்களைச் ற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பழைய வாகனத்தை விற்பனை செய்வீர்.
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். வீடு, கன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். இதுவரை தாமதமான காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும்.
மீனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago