இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்.

கடகம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர். உங்களை ஏமாற்றி கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர். பழைய பிரச்சினை ஒன்று தலைதூக்க வாய்ப்பு உண்டு.

சிம்மம்: குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.

கன்னி: பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தந்தைவழி சொத்துகளில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வதால் கலகலப்பான சூழல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாக திரும்பும்.

தனுசு: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவுடன் பழகவும்.

மகரம்: பால்ய நண்பர்கள் உதவுவர். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் இருந்த தேவையற்ற பயம் நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவர். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். கலை பொருட்கள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்