இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினர் சிலரது செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

ரிஷபம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்: தைரியமான முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பேச்சில் கவனம் தேவை.

கடகம்: தேவையற்ற கவலை, மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம்.

கன்னி: வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும். பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். பொருட்கள் சேரும்.

துலாம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். பண வரவு உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். தேவையான அளவு காசு, பணம் இருக்கும். சகோதர வகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.

தனுசு: அடிமனதில் இருந்த அச்சம், கவலை விலகும். துணிச்சலாக செயல்பட்டு முடிவு எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலை முடிவுக்கு வரும். வீண் செலவுகளை குறைப்பீர்கள்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் இருப்பதை கண்டறிவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. காரியத்தில் கவனம் தேவை.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்: உங்களை அறியாமல் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE