இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பால்ய நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். பிற்பகல் முதல் தொட்டது துலங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, புதுப்பித்து கட்டுவீர்கள்.

மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிற்பகல் முதல் செயல்பாடுகளில் நிதானம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: இன்றைய தினம் தொட்ட காரியம் துலங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

சிம்மம்: நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நீண்ட நாளாக பேசாத உறவினர் வலிய வந்து பேசுவார். பொருள் சேரும்.

கன்னி: பால்ய நண்பர்கள் உதவுவர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். சேமிப்பு கரையும்.

துலாம்: உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவர். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பொருளுதவி கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பிள்ளைகளின் சாதனையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு: உறவினர், நண்பர்களால் செலவு அதிகரிக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பிற்பகல் முதல் மகிழ்ச்சி தொடங்கும். வாகனங்களில் செல்லும்போது நிதானம் அவசியம்.

மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். நண்பர்கள், சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். புதிய கடை, தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவர். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

மீனம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்