மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து வெளி வருவீர்கள். உறவினர்களில் யார் நல்லவர் என்பதை உணர்வீர்கள்.
ரிஷபம்: புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இடையூறுகளைக் கடந்து சாதித்து காட்டுவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.
மிதுனம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கிய பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
கடகம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். வருமானம் உயரும். பிள்ளைகள் முன்பு கேட்ட பொருட்களை இப்பொழுது வாங்கித் தருவீர்கள். பூர்வீக நிலம், வீடு ஆகியவற்றை விற்பனை செய்ய முயல்வீர்கள்.
» ‘தத்கால்’ திட்டத்தின்கீழ் விவசாய மின் இணைப்பு
» பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10 வரை அவகாசம்
சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் கலைத் திறனை கண்டறிந்து வெளிக் கொணர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும்.
கன்னி: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்வீர். தெரியாத நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.
துலாம்: பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். குடும்பத்துடன் தொலைதூர பயணம் செல்ல திட்டமிடுவீர். பணவரவு உண்டு.
விருச்சிகம்: உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். புதிய வாகனம் வாங்குவீர்.
தனுசு: காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பர். ஆளுமைத் திறன், நிர்வாகத்திறன் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும்.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். கேட்ட இடத்தில்பணம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்: கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்துவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். திடீர் பணப் பற்றாக்குறை ஏற்படும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பதால் நன்மை உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago