மேஷம்: இழுபறியாக இருந்த திருமணம் கூடிவரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண வரவு, பொருள் வரவு உண்டு. அதிக செலவு செய்து, பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள்.
ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். தீராமல் இருந்த பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
மிதுனம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு.
கடகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். பொருட்கள் சேரும்.
» அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பல நாட்களாக எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
கன்னி: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பேச வேண்டாம். வெளிநபர்களின் ஆலோசனையை கேட்டு மயங்காதீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.
விருச்சிகம்: உங்கள் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
தனுசு: கடந்தகால சுகமான நிகழ்வுகள், அனுபவங்கள், சாதனைகளை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். யாருடனும் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிலும் உங்கள் கை ஓங்கும்.
மகரம்: எக்காரியத்திலும் பொறுமை தேவை. வீண் செலவுகளை குறைத்து, வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும்.
கும்பம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சொந்த ஊரில் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரில் சென்று முடியுங்கள். ஆன்மிக ஈடுபாடு கூடும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினைகள், வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தடைகளை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago