இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயல்வீர்கள்.

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பணவரவு உண்டு.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். கலை பொருட்கள் சேரும்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். கிராமத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை பிறரிடம் தெரிவிக்க வேண்டாம்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு:அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புது வேலை கிடைக்க தடை, தாமதம் ஏற்படும். யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசவும். பணவரவு உண்டு.

கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். புதிய பொறுப்பு, பதவி உங்களைத் தேடி வரும். பணவரவு உண்டு.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்தி கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பழைய வாகனத்தை விற்பனை செய்வீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்